பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் 136ஆம் ஆண்டு துவக்க விழா!!

-MMH

பொன்னமராவதியில் காங்கிரஸ் கட்சியின் 136 ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி பொன்னமராவதி வட்டாரத்தில்   இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்,

136ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொன்னமராவதி வட்டாரத் தலைவர் செல்வராஜ் தலைமையில் ஆலவயல்,  நகரப்பட்டி ஊராட்சியில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்பு கட்சித் தொண்டர்களுடன் இருசக்கர வாகன பேரணி அலவயல், அம்மன்குறிச்சி, நகரப்படி, அம்மாப்பட்டி, கல்லம்பட்டி, சொக்கநாதப்பட்டி, மேட்டாம்பட்டி ஊராட்சிகளில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் நாட்டுக்கல் ராஜேந்திரன், நகரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், மேலமேலநிலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், அஞ்சுபுளிப்பட்டி அடைக்கலம், ஆலவயல் சுப்பையா, இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர் சம்பத், சுப்பையா, மகளிர் காங்கிரஸ் மற்றும் கிராம கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-M.சதாம் உசேன், பொன்னமராவதி.

Comments