திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியின் 136 ஆம் ஆண்டு துவக்க விழா! காங்கிரஸார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

 

-MMH

திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு காங்கிரசாரால் கொடியேற்றம் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் துவங்கபட்டு 135 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் 136ஆம் ஆண்டின் துவக்க நாளன்று திருப்பத்தூர் காந்திசிலை முன்பு கூடிய காங்கிரஸ் கட்சியினர் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கினர். 

மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன், மாவட்டத் துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் கணேசன், அமீர்பாதுஷா, மாநில பொதுக்குழு உறுப்பினர் இ.எம்.எஸ் அபிமன்யு ஆகியோர் முன்னிலை வகித்தனர். காந்திசிலைக்கு மாலையணிவித்து சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திர இந்தியாவிலும் காங்கிரசாரின் பங்கு மற்றும் தியாகங்கள் குறித்தும் நினைவு கூறப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் சீனிவாசன், சிங்கம்புணரி வட்டார காங்கிரஸ் தலைவர் வீரமணி, நகர நிர்வாகிகள் புதுப்பட்டி செல்வம், வட்டாரப் பொருளாளர் சுப்பையா, உலகினிமாதவன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் நகர் தலைவர் திருஞானசம்மந்தம் நன்றி கூறினார்

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments