27ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம்!! - லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    -MMH

    தமிழகம் முழுவதும் வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சரக்கு லாரிகளில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும், ஒளிரும் ஸ்டிக்கர்களை குறிப்பிட்ட நிறுவனங்களில் தான் வாங்கிப் பொருத்த வேண்டும் எனவும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

வேக கட்டுப்பாட்டு கருவி குறிப்பிட்ட நிறுவனத்தில் வாங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. அந்த கருவியை அண்டை மாநிலத்தில் ஆயிரத்து 500 ரூபாய் தான் என்றும், ஆனால் அரசு கூறியுள்ள நிறுவனத்தில் பத்தாயிரம் ரூபாய் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல் ஒளிரும் ஸ்டிக்கர்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது என்றும் அதில் அதிக அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டி கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இரண்டு வாரத்தில் நிறை வேற்றா விட்டால், வரும் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும் என லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

-சுரேந்தர்.

Comments