தேவகோட்டை அருகே அரசுப் பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர், டி.வி. திருடிய 3 பேர் கைது!
தேவகோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் புகுந்து கம்ப்யூட்டர், டி.வி. திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை அருகே எழுவன்கோட்டை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். அங்கிருந்த டி.வி., கம்ப்யூட்டர், ஸ்பீக்கர் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தேவகோட்டை அருகே உள்ள போரிவயல் கிராமத்தைச் சார்ந்த முத்துக்குமார் என்ற மண்டை (21), கோட்டூர் விஜய் (21), ஆனந்தகுமார் என்ற மணிகண்டன் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
-சங்கர், தேவகோட்டை.
Comments