கோவையை உலுக்கிய 4 வயது சிறுமி பலாத்கார வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

-MMH 

கோவை மாவட்டம் காரமடை அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் பிரி.கே.ஜி.முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது. பிரபலமான பள்ளி என்பதால் காரமடை மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளி பேருந்துகளில் பள்ளிக்கு வருவர்கள். 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் 4 வயது சிறுமியை பள்ளி பேருந்தில் வைத்தே மயக்கி ஊசி செலுத்தி ஓட்டுநர் மற்றும் உதவியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது, மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் தொந்தரவு செய்தது பள்ளி பேருந்து ஓட்டுநர் ரங்கராஜபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (37) மற்றும் அவரது உதவியாளர் காரமடை கண்ணார் பகுதியை சேர்ந்த மாரிமுத்து(55) என்பதும் தெரிய வந்தது. 

அவர்கள் இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ், மாரிமுத்து இருவரையும் போலீசால் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

வழக்கு விசாரணை முடிவு பெற்று பேருந்தின் ஓட்டுநர் கோவிந்தராஜ் மற்றும் அவரது உதவியாளர் மாரிமுத்து இருவரையும் குற்றவாளிகள் என தீர்மானித்து, இயற்கை மரணம் எய்தும் வரை அவர்களுக்கு சிறை தண்டனையும்,ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தும் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார். கோவையை உலுக்கிய சிறுமி பலாத்காரம் சம்பவத்தில் குற்றவாளிகள் இருவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும்,ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-சீனி போத்தனூர்.

Comments