சிங்கம்புணரியில் ஜெயலலிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை மலர்தூவி மரியாதை!!

-MMH

சிங்கம்புணரியில், ஜெயலலிதா அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.கவினர் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்தூவி மரியாதை.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 

உடல் நலக்குறைவால் 2016 செப்டம்பர் 23-ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அவர்கள்,

74 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பின்பும் பலனின்றி கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி தனது 68-வது வயதில் மரணமடைந்தார். இந்நிலையில், இவரின் நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இன்று அதை முன்னிட்டு சிங்கம்புணரி நான்கு முனை சந்திப்பிலிருந்து 100 க்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் ஊர்வலமாக வந்து, சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு  மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செய்தனர். 

இந்த நிகழ்வில் சிங்கம்புணரி அ.தி.மு.க வடக்கு ஒன்றியச் செயலாளர் சொ.வாசு, ஒன்றியப் பெருந்தலைவர் 

திருமதி.திவ்யா பிரபு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்  திருவாசகம், சுரேந்திரன், சரவணன், புருஷோத்தமன், பிரபு, தேசிங்கு, செல்வம், நகர துணைச் செயலாளர். குணசேகரன், வீரையா, அதிமுக மகளிர் அணி பா.தவச்செல்வி மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

-பாரூக் சிவகங்கை.

Comments