பிரிட்டன் நாட்டில் இருந்து கோவை வந்த 59 கொரோனா பரிசோதனை முடிவுகள்...?

-MMH 

பிரிட்டன் நாட்டில் இருந்து கோவை வந்த 59 பேருக்கு கொரோனா  ஆய்வில் நெகட்டிவ். சுகாதாரத்துறை நிம்மதிப் பெருமூச்சு. கோவை. டிசம்பர். 26. இங்கிலாந்து நாட்டின் தலைநகர் பிரிட்டனில் இருந்து கோவை வந்த 59 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. 

ஆதலால் சுகாதாரத்துறை நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கொரோனா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த நாட்டு இடையேயான விமானப் போக்குவரத்து பல்வேறு நாடுகள் துண்டித்து உள்ளன. இந்த நிலையில் இங்கிலாந்திலிருந்து கடந்த மாதம் முதல் 133 பேர் வந்துள்ளனர். இதில் 99 பேர் கோவையைச் சேர்ந்தவர்கள். 

தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பேரும், திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் ஆவார். மேலும் 25 பேர் வருகை இருமுறை பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை வந்த 99 பேரில் 97 பேரை சுகாதாரத்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். 2 பேரும் மீண்டும் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அவர்கள் 97 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 59 பேருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. ஆனாலும் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மற்றவர்களின் பரிசோதனை முடிவுகளுக்காக  சுகாதாரத்துறையினர் காத்துள்ளனர்.

-சீனி போத்தனூர்.

Comments