உலக வலுதூக்கும் போட்டியில் 6 பதக்கங்களை வென்று சாதனை படைத்த கோவை இளைஞர்கள்!!

    -MMH

    கோவையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உலக வலுதூக்கும் போட்டியில் பங்கேற்று 6 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். 

உலக வலுதூக்கும் கூட்டமைப்பு சார்பில் கடந்த 4ம் தேதி நாக்பூரில் உலக அளவிலான வலுதூக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் கலந்து கொள்ள கோவையை சேர்ந்த 'சாஜித் ஹூசைன்' மற்றும் 'ரிச்சர்ட்சன்' என்ற இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. 


இதில், ரிச்சர்ட் சன் ஜூனியர் 100 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதில் டெட் லிப்ட் போட்டியில் 290 கிலோ எடையை தூக்கி உலக அளவிலான முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

இதேபோல், சாஜித் ஹூசைன் என்ற இளைஞர் பெஞ்ச் பிரஸ் போட்டியில் கலந்து கொண்டு ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். 

அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று, காமன்வெல்த்-ல் கலந்து கொள்வதே இலக்கு என்று கூறும் இந்த இளைஞர்கள், அரசு தங்களுக்கு உதவினால் சர்வதேச அளவிலான சாதனைகளை நிகழ்த்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

-சீனி,போத்தனூர்.Comments