ம.ஜ.க. கோவை மாநகர் மாவட்ட 77 வது வார்டு ஆலோசனை கூட்டம்!!

    -MMH 

    கோவை: மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்டம் மத்திய பகுதிக்குட்பட்ட செல்வபுரம் 77வது வார்டு ஆலோசனை கூட்டம் வார்டு செயலாளர் பயாஸ், அவர்கள் தலைமையில் 4.12.2020 வெள்ளி இரவு 9மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மாவட்ட பொருளாளர் TMS அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ATR பதுருதீன், KA பாருக், ஆகியோர் பங்கேற்று கிளை வளர்ச்சி பணிகள் குறித்தும், நிர்வாக கட்டமைப்பு குறித்தும், புதிய உறுப்பினர் சேர்ப்பு குறித்தும், நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.

இக்கூட்டத்தில் IKP மாவட்ட செயலாளர் முஹம்மது ஹனீப்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் EBR இப்ராஹிம், சேட், அக்கீம், பைசல், 78வது வார்டு செயலாளர் ஜாகிர், 77வது வார்டு பொருளாளர் அலி, துணை செயலார்கள் பீர்முகம்மது, நெளபல் ரஹ்மான், மற்றும் கிளை அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்!!

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப்,செல்வபுரம்.

Comments