பணம் வைத்து சேவல்சண்டை!! - 7 பேர் கைது!!

     -MMH

     கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை செம்மேடு வாய்க்கால் மேடு  பகுதியில் பணம் வைத்து சேவல்சண்டை நடைபெறுவதாக ஆனைமலை காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஆனைமலை உதவி ஆய்வாளர் கருப்புச்சாமி பாண்டியன்  தலைமையில் போலீசார் விரைந்தனர். 

அப்பொழுது பணம் வைத்து சேவல் சண்டையில் ஈடுபட்ட சித்தூர் பகுதியைச் சேர்ந்த அருள்ஜோதி, கோவிந்தா புரத்தைச் சேர்ந்த ராஜு, மாரப்ப கவுண்டர் புதூர் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல், கிழவன் புதூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ராஜரத்தினம், கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த ரத்தினசாமி, அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த இரண்டாயிரம் ரூபாய் ரொக்கப் பணமும் இரண்டு சேவல்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-M.சுரேஷ் குமார், கோவை தெற்கு.

Comments