கோவை க.க.சாவடி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை - ரூ.87 ஆயிரம் பறிமுதல்!!

 

     -MMH

     12-12-20. 

    கோவை க.க. சாவடியில் ஆர்.டி.ஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.87 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வாளர் உட்பட 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை திருமலையம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மேற்கு ஆர்.டி.ஓ கட்டுப்பாட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கவதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காலை 6.00 மணி அளவில் கோவை லஞ்ச ஒழிப்பு துறை காவல்துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோரது தலைமையில் சென்ற போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

6 மணியில் இருந்து சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனையில் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ .87 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா, அவரது உதவியாளர் அருண்குமார், ஆகிய 2 பேரை பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேற்கொண்ட சோதனையின் போது இதே சோதனைச் சாவடியில் ரூ.91 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments