8 மாதங்களுக்கு பிறகு வைகை அணை பூங்கா திறப்பு! - சுற்றுலா பயணிகள் மிகழ்ச்சி!!

     -MMH 

    ஆண்டிபட்டி: கொரோனா நோய்த்தொற்று காரணமாக 8 மாதங்களாக மூடப்பட்ட வைகை அணை திங்கள்கிழமை முதல் திறக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை உள்ளது. இந்த அணைப் பகுதியில் வலதுகரை மற்றும் இடது கரைப் பகுதியில் சிறுவா்களுக்கான விளையாட்டுத் திடல், பூங்கா உள்ளிட்டவைகள் உள்ளன.

முக்கிய சுற்றுலா தளமான வைகை அணைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் நாள்தோறும் நூற்றுகணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனா்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக வைகை அணையில் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக நோயின் தாக்கம் குறைந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் 8 மாதங்களாக மூடப்பட்ட வைகை அணையை திறக்க வேண்டும் என சமூக ஆா்வலா்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்தனா். இதனையடுத்து வைகை அணையை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி திங்கள்கிழமை முதல் வைகை அணையை திறந்த பொதுப்பணித்துறையினா் வைகைஅணைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் கட்டாயம் அணிந்து வருவதோடு கிருமிநாசினி மூலம் கைகள் சுத்தம் செய்யப்பட்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டதற்கு பிறகே உள்ளே அனுமதியளிக்கபட்டு வருகிறது.

வைகைஅணை திறக்கப்பட்ட முதல் நாள் என்பதாலும் சாரல்மழை விட்டுவிட்டு பெய்து கொண்டிருப்பதாலும் சுற்றுலாபயணிகளின் வருகை மிக குறைவாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் வைகை அணை திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

சுற்றுலா பயணிகள் கோரிக்கை. கடந்த 8 மாதங்களாக மூடப்பட்ட நிலையில் அணைப் பகுதியில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் இருக்க ஊஞ்சல் சருக்கல் உபகரணங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. 

இதில் விளை யா டு ம் கு ழந் தை க ளு க் கு காயம் ஏற்ப்பட் டுள்ளது. எனவே    விளையாட்டு உபகரணங்களை பொதுப் பணிதுறையினர் விரைந்து சீரமைக்க  வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி. 

Comments