ACC சிமெண்ட் தொழிற்ச்சாலைக்கு அபராதம்!! - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி..!
கோவை மதுக்கரையில் செயல்பட்டுவரும் ACC சிமெண்ட் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் மதுக்கரை, குரும்பபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிமெண்ட் துகள்கள் நிறைந்து மாசு ஏற்படுவதாக கூறி குரும்பபாளையம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் தொழிற்சாலை மீது குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் குரும்பபாளையம் பகுதியில் மாசுகட்டுப்பாடு கருவிகள் பொருத்தி கண்காணித்து வந்தனர்.
மேலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சிமெண்ட் ஆலையில் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர் ஆய்வில் விதிமுறைகளை கடந்து மாசு வெளியேறுவது கண்டறியப்பட்டது ஆய்வு அறிக்கைகளின் படி சுற்றுச்சூழல் விதிமீறல் உள்ளதால் மதுக்கரை ACC சிமெண்ட் தொழிற்சாலைக்கு 45 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது மாசு கட்டுப்பாட்டு வாரியம்.
-M.சுரேஷ்குமார் கோவை தெற்கு.
Comments