டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்காக!- தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

 

-MMH

தலைநகர் டெல்லியில் புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக இந்தியாவின்  அனைத்து பகுதிகளிலிருந்து வந்த  விவசாயிகள்  ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தஞ்சையில் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .அப்போது அவர்கள் புதிய 3  வேளாண் சட்ட மசோதாக்களை  திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர் . மேலும் அவர்கள் மத்திய அரசு விவசாயிகளுடன்  நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர் .போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மீது எந்த ஒரு தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர். தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் பரபரப்பு நிலவியது. 

நாளைய வரலாறு செய்திக்காக,

 -ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments