கம்பத்தில் காவல் துறை கொடி அணிவகுப்பு ஊர்வலம்!!
தேனி மாவட்டம் கம்பத்தில் உத்தமபாளையம் துணைக் காவல் கோட்டம் சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களைக் குறைக்கவும், சட்ட ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படாவண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தமபாளையம் துணை கோட்ட காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பாளர் இ.சாய் சரண் தேஜஸ்வி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
கொடி அணிவகுப்பு ஊர்வலம் அரசமரத்தில் தொடங்கி காந்தி சிலை, வ.உ.சி.திடல், பூங்கா திடல், நாட்டுக்கல், கம்பம்மெட்டு சாலை, கோம்பை சாலை வழியாக கம்பம் வடக்கு காவல் நிலையத்தை அடைந்தது. இதுபற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி கூறுகையில், பொதுமக்களிடையே குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது என்றார். துணை காவல் கண்காணிப்பாளர் சின்னகண்ணு நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஆசிக் தேனி.
Comments