கோவையில் கிளை அலுவலகம் திறப்பு சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி..!!

 

-MMH 

     கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஸ்ரீராம் நகர் பகுதியில் நேற்றைய தினம். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட மக்கள் உரிமைகள் செயல்பாட்டு கழகத்தின் கிளை அலுவலகம் திறப்பு விழா மிகச் சிறந்த முறையில் நடைபெற்றது‌.

இந்த மக்கள் உரிமைகள் செயல்பாடு இயக்கத்தில் மக்களுக்குதினந்தோறும் நிகழக்கூடிய பிரச்சினைகளுக்கு ஆலோசனை காணும் வகையில் நேற்றைய தினம் மாலை 6 மணி அளவில் போத்தனூர், ஸ்ரீராம் நகர் பகுதியில் கிளை அலுவலகம் திறக்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக மாநில நிறுவன தலைவர் திரு கே குரு அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார். அதில் கோவை மாவட்ட தலைவர் திரு ஆரோக்கியராஜ் மாவட்ட செயலாளர் திரு மருத்துவர் பீ கே பாலா தெற்கு மண்டல தலைவர் திரு சின்னராசு தெற்கு மண்டல செயலாளர் திரு சேன் மற்றும் உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

-ஈஷா கோவை.

Comments