கிராமப்புற மகளிருக்கு நுன் கடன்கள் வழங்கும் சாடின் கிரெடிட் நிறுவனம்!! - கோவையில் துவக்கம்.

 

    -MMH

     கோவை: கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு கடன் வழங்கும் பொருட்டு சாடின் கிரெடிட்கேர் என்ற நிறுவனம் கோவையில் தனது கிளையை துவங்கியுள்ளது.

இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. அப்போது அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தங்கராஜ் கூறுகையில்,

"தென்னிந்தியாவில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் எங்களது கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் மொத்தம் 1022 கிளைகள் கொண்ட இந்த நிறுவனத்தில், 40 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த சூழலில், கோவை மண்டலத்தில் காந்திபுரம், கிணத்துக்கடவும், தாராபுரம் மற்றும் உடுமலையில் சாடின் கிரெடிட்கேர் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. எங்களது நிறுவனத்தில் இருந்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டும் கடன்கள் வழங்கபடுகிறது. ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கடன் வழங்குகிறோம். 

எங்களது நிறுவனம் தனி நபர்களுக்கு கடன் வழங்குவது இல்லை. கிராமப்புறங்களில் கடன் வசதிகளை கொண்டு சேர்க்கிறோம். வங்கி சேவையை பயன்படுத்த முடியாத மக்களுக்கு கடன் உதவிகளை சேர்த்து வருவதால் நல்ல வரவேற்பு உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள் 99.8 சதவீதம் வரை திரும்பக்கிடைத்து, வராக்கடனுக்கு வழிவகுப்பதில்லை. நிச்சயம் இந்த கடன் பெண்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

-சீனி,போத்தனூர்.

Comments