மக்களே உஷார்..!!! கோவையில் செல்போன் திருடும் கும்பல்..!
கோவையில் சிறுவனிடம் மர்ம நபர்கள் செல்போன் பறித்துச் செல்லும் கண்காணிப்பு வீடியோ காட்சிகள் இப்போதைய நேரத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே கோவையில் அதிகளவில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில், திருட்டு தொடர்பான வீடியோ காட்சிகள்தான் அதிகளவில் வெளியாகிறது.
கோவை கரும்புக்கடை டோல் கேட் அருகே கடந்த 23ஆம் தேதி இரவு வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டு இருந்த சிறுவனிடம் அந்த வழியாக புல்லட் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிறுவனிடம் செல்போனை பறித்துச் சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவம் அனைத்தும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோதான் தற்பொழுது மாவட்டத்தில் அதிகம் பேர் பார்க்கும் வீடியோவாக மாறியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக குணியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் செல்போனை பறிகொடுத்தவர் பெயர் இரசாத் என்பதும், அவர் கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
-கிரி தலைமை நிருபர்.
Comments