கூடுதல் கட்டணம் இல்லாமல் கேஸ் சிலிண்டரை பெறுவது எப்படி..?

-MMH 

     வீடுகளில் சமைய் செய்ய பயன்படும் சிலிண்டர்களை, கேஸ் கம்பெனி குடோனில் இருந்து நாமே எடுத்து வந்தால், அவர்கள் நம்மிடம் வினியோக கட்டணம் பெறமுடியாது.மாறாக நாம் அந்த நிறுவனத்தில் இருந்து ரூ.19.50 பெறமுடியும். 

தமிழகத்தில் வீடுகளில் பலர சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு பகுதியில் இருந்தும் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வாறு விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகபுகார் எழுந்தது இதனை தடுக்க உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கேஸ் சிலிண்டரை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள் ரசீதில் உள்ள தொகையைவிட, வீடுகளுக்கு ஏற்ப 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக, இது தொடர்பாக புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிதித்ருந்தார். இதநிலையில் சிலிண்டர் வினியோகமாக கட்டணம் வசூலிக்கப்படும் ரூ.19.50 நீங்கள் திரும்பப் பெற முடியும்.

உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எந்தவொரு ஏஜென்சியின் குடோனில் இருந்து உங்களுக்கு கேஸ் சிலிண்டரை நீங்களே எடுத்து வந்தால் ரூ. 19.50 பெறலாம். மேலும் எந்த ஒரு கேஸ் ஏஜென்சி ஆபரேட்டர் அந்த தொகையை உங்களுக்கு வழங்க மறுக்கிறார்கள் எனில் அது  தொடர்பாக 18002333555 என்ற கட்டணமில்லாத எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுறள்ளது.

-ஸ்டார் வெங்கட். 

Comments