சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை நல்லமுடி பகுதிக்குட்பட்ட ஒன்பதாம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு வயதான கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இறந்து கிடந்த கன்றுக்குட்டி நல்லமுடி மூன்றாம் பிரிவு எஸ்டேட்டை சேர்ந்த சையத் என்பவருக்கு சொந்தமானதாகும்.
-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.
Comments