கர்ப்பிணி மனைவியை தவிக்க விட்டுச் சென்ற விமானப்படை வீரர்!!

     -MMH

கோவை டிசம்பர். 23- ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விமானப்படை வீரர் பவன்குமார் (27), இவருக்கு திருமணமாகி சாக்ஸி (23), என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளார். 4 வருடங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில் கடந்த நவம்பர் மாதம் பணி மாறுதலாகி பவன்குமார் சூலூர் விமானப்படை தளத்துக்கு வந்துள்ளார். 

சூலூர் வந்ததிலிருந்து மனைவியுடன் பவன்குமார் தொடர்பு கொள்ளவில்லை என தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த கர்ப்பிணி சாக்ஸி நேற்று முன்தினம் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு வந்துள்ளார். பின்னர் தனது கணவரை சந்தித்துப் பேசியுள்ளார். அவர் ஒரு கால் டாக்சியில் மனைவி மற்றும் குழந்தையை ஏற்றிக்கொண்டு சிந்தாமணிபுதூர் பகுதியில் இறக்கி விட்டு விட்டு தலைமறைவாகி விட்டார். 

அதை தொடர்ந்து சாக்ஸி திரும்பவும் சூலூர் விமானப்படைத் தளத்துக்கு வந்து நடந்தவற்றை கூறியுள்ளார். இதற்கு விமானப்படை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி நேற்று முன்தினம் முதல் விமானப்படை தளம் வாசலில் கைக் குழந்தையுடன் அமர்ந்து இருக்கிறார். விமானப்படை ஊழியர்கள் அதிகாரிகள் விசாரித்து செல்கிறார்களே தவிர எந்த உதவியும் செய்யாதது மிகவும் பரிதாபமாக உள்ளது.

-சீனி,போத்தனுர்.


Comments