இளைஞர்கள் அதிமுகவில் இணையும் விழா!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இன்று காலை 11:00 மணிக்கு நடைபெற இருக்கும் விழாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அதிமுகவில் இணைய உள்ளார்கள். நிகழ்ச்சிக்கு அதிமுக சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் பி ஆர். செந்தில்நாதன் முன்னாள் எம்பி, அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், மாவட்ட ஆவின் சேர்மன் கே ஆர் அசோகன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன். மணிபாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்க உள்ளார்கள்
நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் தெற்கு அதிமுக செயலாளர் எல்.சிவமணி, திருப்பத்தூர் வடக்கு அதிமுக செயலாளர் இராம.ராமலிங்கம், திருப்பத்தூர் தெற்கு அதிமுக செயலாளர் வி.வடிவேல் மற்றும் திருப்பத்தூர் நகர அதிமுக செயலாளர் ஏ.இப்ராம்ஷா ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளார்கள். மேலும் சிவகங்கை மாவட்ட முன்னணி அதிமுக பொறுப்பாளர்கள் அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்கள். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விழா நடக்க இருப்பதால் சிவகங்கை மாவட்ட அதிமுக தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக இந்நிகழ்வு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments