குழியினால் குழப்பம்!! கவிழும் நிலையில் தப்பித்த லாரி...!!

 

-MMH

கோவை மாவட்டம் போத்தனூர் கடை வீதி பகுதியில் சில தினங்களுக்கு முன்பு மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று அந்த பகுதியில் வரும் பொழுது பெரிய குழி ஒன்றில் சிக்கி கவிழும் அபாயம் ஏற்பட்டது.

விழித்துக்கொண்ட லாரி டிரைவர் உடனடியாக அந்த லாரியை விட்டு இறங்கி அருகில் நின்று கொண்டிருந்த டிராபிக் போலீசாருக்கு தகவல் கொடுத்து போலீசார் உதவியுடன் நான்கு மணி நேரங்கள் போராட்டத்திற்கு பின் அந்தலாரி அகற்றப்பட்டது.

இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி அந்த போத்தனூர் கடை வீதி பகுதியில்  நிகழ்வதால்   சாலைகளில் தோண்டப்படும் குழிகளை சரிவர மூடவேண்டும் என்று அங்குள்ள பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

-ஈஷா கோவை.

Comments