தஞ்சை மாணவனின் வியக்கவைக்கும் விண்வெளி சாதனை..!!

-MMH

தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்த ரியாசுதீன் என்ற மாணவர் உருவாக்கிய செயற்கைக்கோள் உலகிலேயே மிக சிறிய செயற்கைக்கோள் என்ற சாதனையை படைத்துள்ளது. இவர் சாஸ்திர பொறியியல்  கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

CUBES IN SPACE என்ற பெயரில் நாசா விண்வெளி ஆராய்ச்சி கூடமும் IDOOSLEDU.INC  என்ற அமைப்பும் இணைந்து ஆராய்ச்சி  போட்டிகளை ஆண்டுதோறும்  நடத்தி வருகிறது. 2019 -2020 ஆம் ஆண்டுக்கான போட்டியில் 73 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர் போட்டியில் பங்கேற்ற ரியாசுதீன் வடிவமைத்த விஷன் 1& 2 செயற்கைக்கோள்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு செயற்கைக்கோள்களும் தலா 37 மில்லி மீட்டர் உயரமும் 33 கிராம் எடையும் கொண்டவை இதற்குப் ஃபெம்டோ என்று பெயரிடப்பட்டுள்ளது .இந்த செயற்கைக்கோளில்  11 சென்சார் பொருத்தப்பட்டிருப்பதால் விண்வெளியிலிருந்து பல வகையான தகவல்களை அறியலாம். ராக்கெட்டில் ஏற்படும் காஸ்மிக் கதிர்களை தன்மை பற்றி தெரிந்து கொள்ளலாம் என்கிறார் ரியாஸ்தீன்.

உலகிலேயே மிகக் குறைந்த எடை கொண்ட செயற்கைக்கோளை உருவாக்கிய மாணவரை  திமுக தலைவர் திரு மு க ஸ்டாலின் பாராட்டியுள்ளார். திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு சந்திரசேகரன் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு டி. கே. ஜி நீலமேகம் ஆகியோர் மாணவரையும் அவர் குடும்பத்தினரையும் அழைத்து  வாழ்த்து தெரிவித்து பொன்னாடை போர்த்தினர் .மாணவர் ரியாசுதீன் தஞ்சை நகருக்கு பெருமை சேர்த்துள்ளதாக அப்போது திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் திரு சந்திரசேகரன் தெரிவித்தார் .மாணவரை நாமும் நாளைய வரலாறு சார்பில் வாழ்த்துவோம். வருகின்ற காலங்களில் மாணவர் மென்மேலும் பல்வகையான சாதனைகளை படைத்து இந்த மண்ணுக்கு பெருமை தேடித்  தரவேண்டும் என்று வாழ்த்துவோம்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.இராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments