நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்!! - சென்னை மாநகராட்சி மெத்தனம்..!
சென்னை மாநகராட்சி இந்த குப்பை சரி செய்யுமா.சென்னை. போரூரில் பாலமுருகன் திருக்கோயில் அருகில் பாலமுருகன் கோயில் முதல் தெருவில் சாலையின் முகப்பு பகுதி ஒரு குப்பை கொட்டும் இடமாக மிகவும் துர்நாற்றத்துடன் அசுத்தமாகும் காணப்படுகிறது.
அப்பகுதியில் இன்று கிருத்திகை முன்னிட்டு பொது மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர் . குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது குப்பை அள்ளுவதில், மெத்தனம் காட்டுவதே இதற்கு காரணம் இதற்கு உடனே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க,வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.
Comments