அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு! - தமிழக அரசின் அதிரடி திட்டம்!!

 

    -MMH

     சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் விதித்து இணையதள முகவரியையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொது விநியோக திட்டத்தில் 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை பெறும் அட்டைகளாக உள்ளன. இதில் பெரும்பாலானோர் தங்களது அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை ஏற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அட்டை நகலை இணைத்து www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அல்லது சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தகுதி அடிப்படையில் பல அட்டைகள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றப்பரும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு அவ்வப்போது வழங்கும் நிவாரணத் தொகை, பொங்கல் பரிசாக கிடைக்கும் 1000 ரூபாய் ஆகியவை சர்க்கரை அட்டைதாரர்களுக்கு கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் பெரும்பாலானோர் அரிசி அட்டைதாரர்களாக தங்களை மாற்றிக் கொண்டால் அரசின் பொங்கல் பரிசு அவர்களுக்கும் கிடைக்கும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பொங்கல் பரிசுத் தொகை அனைத்து தரப்பினருக்கும் கிடைத்துவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்கிறார்கள். அதன் விளைவாகவே சர்க்கரை அட்டைதாரர்களையும் அரிசி அட்டைதாரர்களாக மாற்றுவது குறித்து வந்த இந்த அறிவிப்பு என்கிறார்கள்.

-பாலாஜி தங்மாரியப்பன்,

 சென்னை போரூர்.

Comments