அறிக்கை நாயகன் என தனக்கு பட்டம் கொடுத்த முதல்வர் பழனிசாமிக்கு ஊழல் நாயகன் என பட்டம் கொடுக்கிறேன்: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு!!

 

     -MMH

      சென்னை : அறிக்கை நாயகன் என தனக்கு பட்டம் கொடுத்த முதல்வர் பழனிசாமிக்கு ஊழல் நாயகன் என பட்டம் கொடுக்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்தனர். நிவர் புயலை தொடர்ந்து வந்த புரெவி புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அடுத்த தினமான இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு ஆய்வு செய்தார்.

அங்கு புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஸ்டாலின், தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; விவசாயிகள் போராட்டத்துக்கு திமுக தொடர்ந்து ஆதரவு தரும். விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் திமுக ஏற்கனவே போராட்டம் நடத்தி உள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தை ஒடுக்க முயற்சி செய்த தமிழக அரசு கண்டனம் தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் கொடுத்த இருந்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக வாக்களித்தது. அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினோம். ஊழலில் காட்டும் வேகத்தை மழை வெள்ளத்தை கட்டுப்படுத்துவதில் அதிமுக அரசு காட்டவில்லை. குடிமராமத்து பணியை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் கமிஷன் அடிப்பதாக குற்றம் சாடினார். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சியின் வேலை.

எனக்கு கொடுத்த அறிக்கை நாயகன் என்ற பட்டத்தை நான் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு கொடுத்தவருக்கு நான் திருப்பி கொடுக்க வேண்டுமல்லவா நான் அவர்க்கு கொடுக்கும் பட்டம் ஊழல் நாயகன். ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. குடிமராமத்து பணியில் அரசு சாதனை செய்யவில்லை; ஊழல்தான் செய்து வருகின்றனர். சாதிவாரியான புள்ளிவிவரத்திற்கு ஆணையம் என்பது அரசியல் நாடகம் எனவும் கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்; ஜனநாயகத்தில் அனைவருக்கும் அரசியலுக்கு வர உரிமை உள்ளது. ரஜினிகாந்த் கட்சி தொடங்கட்டும் கொள்கைகளை அறிவிக்கப்படும் அதன் பிறகு கருத்து கூறினேன் என கூறினார்.

-பாலாஜி தங்கமாரியப்பன்,

 சென்னை போரூர்.

Comments