சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!!

     -MMH

    நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சமையலறை பொருட்கள் அதிக மருத்துவ குணங்கள் கொண்டுள்ளதாக இருக்கின்றன. இதில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய பண்பு சீரகத்திற்கு உள்ளது. சீரகம் என்றால் சீர்+அகம். இது அகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சினைகளை தீர்க்க வல்லது. சீரகத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது தான். ஆனால் அதைவிட சிறந்தது சீரகத் தண்ணீரை பருகுவைத்து ஆகும். தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

கர்ப்பிணி பெண்களுக்கு: வயிற்று வலிக்கு தீர்வு தரும். கர்ப்பிணி பெண்களுக்கு சீரகம் தண்ணீர் கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை தூண்டும். தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்.

செரிமான பிரச்சினைகள்: செரிமான பிரச்சினை உள்ளவர்கள் சிறிது சீரக தண்ணீரை குடித்தால் உடனடியாக நிவாரணம் பெறலாம். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையை நீக்கி விடும்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை: உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள் சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுவது.

கல்லீரல் பாதுகாப்பு: சீரகத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கிறது. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. வளர்ச்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. சீரக நீர் உடலிசீரக நீர் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. பித்தப்பைக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் கல்லீரல் பலம் பெறும்.

மாதவிடாய்கால வலி: இரும்பு சத்து குறைபாட்டை சீராக தண்ணீர் சரிசெய்யும். மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாகவும் விளங்கும். அந்த சமயத்தில் சீராக தண்ணீர் குடிப்பதன் மூலம் வலியை கட்டுப்படுத்தலாம். சருமம் பளபளக்கும். இதில் இருக்கும் பொட்டாசியம், மங்கனீசியம், செலினியம் ஆகியவை தோலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.

முகம் பளபளக்க: சீராக நீருடன் மஞ்சள் தூளை கலந்து முகத்தை கழுவினால் முகம் பளபளக்கும். சருமம் மென்மையாக, மிருதுவாக இருக்கும். சீரகத்தில் உள்ள வைட்டமின் E சத்தானது இளமையை தக்கவைக்க உதவுகிறது. மேலும் பல வகையான சரும பிரச்சினைகளை தீர்த்து வைக்க உதவியாக இருக்கும்.

-ஸ்டார் வெங்கட்.

Comments