அரசு அலுவலகங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் புகைப்படங்களை வைக்கக் கோரிக்கை! ஆட்சியரிடம் மனு!!

-MMH

அரசு அலுவலகங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்  புகைப்படங்களை வைக்கக் கோரி முக்குலத்து புலிகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு: சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திரு உருவ படத்தை அரசு அலுவலகம் மற்றும் அரசு சார்ந்த கட்டிடங்களில் வைக்க தமிழக அரசின் அரசாணை உள்ளது. அரசு அலுவலகங்களில் இடம் பெற்றுள்ள நிலையில் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்தையும் வைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் முக்குலத்து புலிகள் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. 

அந்த வகையில் கோவையில் அக்கட்சியின் மண்டலச் செயலாளர் ரமேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அரசு அலுவலகங்களில் தேவரின் திருவுருவப்படத்தை வைக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

-சீனி போத்தனூர்.

Comments