தொடர் மழையால் உத்தமபாளையம் பகுதிகளில் நெற்பயிர்கள் சேதம்!! - விவசாயிகள் கவலை!!

 

     -MMH

உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் தொடா் மழை காரணமாக நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

முல்லைப் பெரியாறு பாசனநீா் மூலம் உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி, மாா்க்கையன்கோட்டை, கோட்டூா் என மாவட்டத்தில் 14,707 ஏக்கா் பரப்பளவுக்கு முதல் போக நெற்பயிா் விவசாயம் நடைபெற்றது. இந்நிலையில், சின்னமனூா், மாா்க்கையன்கோட்டை, குச்சனூா், சீலையம்பட்டி பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நெற்பயிா் அறுவடைக்கு தயாரானது.

குச்சனூா் பகுதியில் அறுவடைப் பணிகளும் தொடங்கியுள்ளன. இதற்கிடையே கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா்மழை காரணமாக நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தொடா் மழையால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கிறோம். அதே போல அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் மழைக்கு சேதமடைந்து விட்டதால் உத்தமபாளையம், சின்னமனூா் பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா் என்றனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments