சிங்கம்புணரியில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் மறைமுக ஏலம்!! தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி!!

     -MMH

சிவகங்கை மாவட்டம்,  சிங்கம்புணரி தென்னை விவசாயம் அதிகம் உள்ள பகுதி.

இங்கு தேங்காய்கள் விற்பனை செய்வது என்பது மண்டிகள் மூலமாகத்தான் இதுவரை நடைபெற்று வந்தது. தேங்காய் மன்டிகள், 1000 தேங்காய்களுக்கு விலை நிர்ணயம் செய்து, சேதாரக்காய்கள் 150 சேர்த்து 1150 காய்கள் எடுத்துச்செல்லும் நிலை இருந்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் சார்பாக களமிறங்கிய வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையினர், விவசாயிகளை ஒன்றிணைத்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களுடைய விலை பொருட்களை ஏலம் விட ஏற்பாடு செய்து தந்தது.

இன்று சிங்கம்புணரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற, மட்டை தேங்காய் மறைமுக ஏல விற்பனையில் இப்பகுதி விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தேங்காய் வியாபாரிகள் விவசாயிகளின் தேங்காய்களை பார்வையிட்டு அதற்கான விலை மதிப்பீடு எழுதிய துண்டுச்சீட்டை ஏலப்பெட்டியில் போட்டனர். அனைத்து வியாபாரிகளும் தங்களுடைய விலை குறிப்பை போட்டபின்,  விவசாயிகளுக்கு முன்பாக பெட்டிகள் திறக்கப்பட்டு அதிகவிலை கேட்ட வியாபாரிக்கு தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டது.


இந்த மறைமுக ஏலத்தில் இரண்டு விவசாயிகள் கலந்து கொண்டனர். ஒரு விவசாயி 4100 தேங்காய்களுக்கு அதிகபட்சவிலையாக ரூபாய் 10.50 பைசா வீதம், 43,050 ரூபாய்க்கும் மற்றொரு விவசாயி 1760 தேங்காய்களுக்கு அதிகபட்சவிலையாக  ரூபாய் 9.50 பைசா வீதம் 16720 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு மொத்ததொகை 59770 ரூபாய் ரொக்கமாக  வியாபாரிகளிடம் பெற்று விவசாயிகளிடம் முழுவதுமாக பட்டுவாடா செய்யப்பட்டது. இந்த நிகழ்வினால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். 

இன்றைய ஏலத்தில் சிவகங்கை விற்பனைக்குழு செயலாளர் ரவி, சிவகங்கை விற்பனைக்குழு தனி அலுவலர் சுரேஷ் மற்றும் சிங்கம்புணரி விற்பனை கூட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இவர்களுடன் வேளாண்மை உதவி அலுவலர் இரத்தினகாந்தி ஆகியோரும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வட்டார விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த மறைமுக ஏலத்தை ஏற்பாடு செய்த சிங்கம்புணரி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு  வியாபாரிகள் விவசாயிகள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

- அப்துல் சலாம், திருப்பத்தூர்.

Comments