குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவன் கைது.!!

     -MMH

     கோவை: கோவை மாவட்டம், சூலுார் அடுத்த பாப்பம்பட்டி ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52), மனைவி பத்மாவதி(45). பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கும் தொழில் செய்து வந்தனர். மூன்று மகள்கள், ஒரு மகன். அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. 

நேற்று முன்தினம், மது அருந்தி, ஆறுமுகம் வீட்டுக்கு வந்தார். தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆத்திரமடைந்த ஆறுமுகம், பாட்டிலை உடைத்து பத்மாவதியை குத்தி விட்டு, போதையில் துாங்கி விட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை, அருகில் வசிக்கும் மகள், வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தாய் இறந்து கிடந்தது கண்டு கூச்சலிட்டார். ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.

-சுரேந்தர்.

Comments