சமமாக்கப்பட்ட பொள்ளாச்சி ராசக்கா பாளையம் சாலை..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ராசக்கா பாளையம் சாலை சமன் செய்யப்பட்டது.
பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் செல்லும் பிரதான சாலையில் ராசக்கா பாளையம் என்னும் இடத்தில் ரோடு சற்று மேடாக உயரத்தில் இருந்தது.
இதனால் எதிர் வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துகள் ஏற்பட்டு வந்தன.இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்.அரசு இதனை கவனத்தில் கொண்டு துறை ரீதியாக மக்கள் பயன் பெரும் வகையில் நெடுஞ்சாலை துறை சார்பில் பணிகள் தொடரப்பட்டது.
மேடாக உள்ள ரோட்டை 5 அடிக்கு கீழ் தோண்டி மேடான சாலையை சமன் செய்ய திட்டம் இடப்பட்டு பணிகள் கடந்த 1 மாதமாக நடை பெற்றது.
தற்போது சாலை சமன் செய்யப்பட்டு பணிகள் ஓரளவு முடிக்கப்பட்டு இருக்கிறது.வாகன ஓட்டிகள் சிரம் இல்லாமல் செல்ல விபத்துகளை தவிர்க்க சாலை சமன் செய்யப்பட்டது. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சாலை திருப்பூர் சேலம் சென்னை செல்லும் பிரதான சாலை குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்,பொள்ளாச்சி கிழக்கு.
Comments