மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்ட கோரி நாம் தமிழர் கட்சி போராட்டம்!!

 


     -MMH

     உலகையே ஆண்ட பேரரசன் அருள் மொழி வர்மன் என்கின்ற 'ராஜராஜ சோழனுக்கு' மணிமண்டபம் கட்ட நீண்ட நாட்களாக தமிழர் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று தஞ்சையில் நாம் தமிழர் கட்சி இடைவிடாத மழையிலும் குடைபிடித்து போராட்டத்தை முன்னெடுத்தனர். காலம் காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த சோழ சேர பாண்டிய மன்னர்களில் மிகவும் உலகப்  பிரசித்தி பெற்ற மன்னர்கள் சோழ மன்னர்கள் ஆவார்கள். அத்தகைய சோழ மன்னர்களின் சாம்ராஜ்யத்தை இடையில் வந்த மராட்டிய மன்னர்கள் கைப்பற்றி அதனை ஆண்டு வந்தனர். பின்னர் சுதந்திர போராட்டத்திற்கு பின்பு சுதந்திர இந்தியாவில்  மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு அவரிடம் இருந்த நிலங்கள் மற்றும் சொத்துக்கள் அரசுடைமை ஆக்கப்பட்டன. இருந்தபோதிலும் அரண்மனை மற்றும் சில சொத்துக்கள் மராட்டிய மன்னர்களின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வந்தன. தஞ்சை  பெருவுடையார் கோவில் மற்றும் சில கோவில்களும் அவர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வந்தன. இதனை நீண்ட காலமாக தமிழர் அமைப்புகள் கண்டித்து வந்தன. அவர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என தமிழர் அமைப்புகள் போராடி வந்தன. தற்பொழுது மராட்டிய மன்னர்களின் கல்லறைகளை புதுப்பிக்கும் பணியில் தஞ்சை மாநகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. அதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்த செய்தி மக்கள் மத்தியில் தெரிய வந்தவுடன் தமிழ் அமைப்புகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தன. 

அதன் தொடர்ச்சியாக நேற்று நாம் தமிழர் இயக்கம் மற்றும் தமிழர் இயக்கங்கள் தஞ்சையில் விடாத மழையிலும் குடையை பிடித்துக்கொண்டு தங்களுடைய எதிர்ப்பு உணர்வுகளை பதிவு செய்தனர். மேலும் அவர்கள் தமிழ் மன்னன் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் கட்டாமல் மராட்டிய மன்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை கல்லறையை புதுப்பிப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பினார். இது தொடரக்கூடாது என்று தமிழ் அமைப்பினர் தெரிவித்தனர் . 

நாளைய வரலாறு செய்திக்காக,

- V.இராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments