கேரளாவில் உள்ளாட்சித் தோ்தலையொட்டி இரட்டை வாக்காளர்காளை தடுக்க தமிழக எல்லையில் தீவிர சோதனை.!!

  

    -MMH

     கேரளாவில் டிசம்பர்.8 உள்ளாட்சித்  தேர்தல் இரட்டை வாக்காளர்காளை தடுக்க தமிழக எல்லையில் தீவிர சோதனை. 

கேரளாவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலையொட்டி இரட்டை வாக்காளா்களைத் தவிா்ப்பதற்காக தேனி மாவட்டத்தில் கேரள எல்லைப் பகுதியான குமுளி, கம்பம்மெட்டு சோதனைச் சாவடிகளில், ஞாயிற்றுக்கிழமை முதல் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த தமிழக தோட்டத் தொழிலாளா்கள் கேரளாவில் தங்கி வேலை செய்வதால், இவா்களுக்கு அங்கும் வாக்குரிமை உள்ளது. இதுதொடா்பாக இடுக்கி, தேனி மாவட்ட ஆட்சியா்கள் ஆலோசனை நடத்தினா். அப்போது ஒருவா் ஒரு வாக்குரிமை மட்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

இதற்கிடையில், உள்ளாட்சி தோ்தலையொட்டி, தொழிலாளா் அட்டை, கூட்டுறவு வங்கி உறுப்பினா் அட்டை மற்ற மாநிலங்களில் உள்ளவா்களின் ஆதாா் காா்டு போன்றவைகளின் மூலம் கள்ள ஓட்டுகள் சோ்க்கப்பட்டுள்ளதாக காங்கிரஸாா் புகாா் தெரிவித்திருந்தனா்.

இதனால் இடுக்கி மாவட்டத்தில் டிச. 8 ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலில் இரட்டை வாக்காளா் முறையை பயன்படுத்தி ஓட்டுப்போட வாக்காளா்கள் வரலாம் என்ற தகவலையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் எல்லைப்பகுதிகளான கம்பம் மெட்டு, குமுளி பகுதிகளில் கேரள போலீஸாா் வாகனங்களில் செல்லும் நபா்கள், அவா்களது விலாசம், எங்கு செல்கின்றனா் என பதிவு செய்து அனுப்புகின்றனா்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஆசிக்,தேனி.

Comments