மர்ம உலோக தூண்களின் ரகசியம்..வேற்று கிரக வாசிகளா ..??

    -MMH

    அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 3 நாடுகளை தொடர்ந்து நெதர்லாந்து நாட்டிலும் மர்ம உலோக தூண் தென்பட்டுள்ளது. அமெரிக்காவின் உடா பாலைவனத்தில் கடந்த மாதம் உலோக தூண் தென்பட்டது. பிறகு அது திடீரென மாயமாகி விட்டது. இதையடுத்து கலிபோர்னியாவிலும், Romania மற்றும் பிரிட்டனிலும் மர்ம உலோக தூண்கள் தென்பட்டன. அதை வைத்தது யார், எடுத்து சென்றது யார் என தெரியாததால், வேற்று கிரக வாசிகள் குறித்த ஊகமும் ஏற்பட்டது. இந்நிலையில் நெதர்லாந்தின் வடக்கு பிரைஸ்லாந்து மாகாணத்திலுள்ள கிகென்பர்க் பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் அதேபோல உலோக தூண் தென்பட்டுள்ளது.  

-சுரேந்தர்.

Comments