அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு!!

     -MMH

     பொள்ளாச்சி வடக்கு  ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில் 15வது நிதிக்குழு மானியமாக 1 கோடியே 32 லட்சத்தி 24 ஆயிரத்து 532 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 17 கவுன்சிலர்களுக்கு தலா 7.90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ஆதிதிராவிடர் காலனியில் 25 சதவீதமும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண 25 சதவீதமும் கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள 50 சதவீத தொகையை கொண்டு கவுன்சிலர்கள் தங்கள் வார்டில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-M.சுரேஷ்குமார், கோவை தெற்கு.

Comments