கழுத்து வலி குணமடைய இதை செய்து பாருங்கள்..!

-MMH 

கழுத்து வலி எப்படி குணப்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்:, ஐஸ் கட்டியை எடுத்து அதனை துணியில் வைத்து கழுத்து வலி உள்ள இடத்தில் 2 நிமிடம் வரை வைத்து வரவும் பின்பு கழுத்து வலி குறைய ஆரம்பிக்கும்.

நொச்சி இலையை எடுத்து நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி அதை தலையுடன் சேர்த்து கழுத்து பகுதியிலும்  தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளியுங்கள். 

கண்டதிப்பிலியை எடுத்து அதனை இடித்து பால், நீர் சேர்த்து வேக வைத்து பனங்கற்பண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால் கழுத்துவலி காணாமல் போகும். கழுத்து பயிற்சி செய்வதாலும் கழுத்து வலி குணமடையும். 

-ஸ்டார் வெங்கட்.

Comments