பள்ளி மாணவன் விபத்தில் பலி..!!

     -MMH

    கோவை மாவட்டம் பொள்ளச்சியை அடுத்து உள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் ஹரிஹரன். கோட்டூர் அரசு பள்ளி யில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் அவர் தனது நண்பர் முகமது என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பொள்ளச்சி- கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனம் CTC மேட்டில் வந்து கொண்டு இருந்த போது எதிரே வந்த லாரி ஓட்டுனர் இருசக்கர வாகனத்தின்  மீது பயங்கரமாக மோதினர். இதில் வண்டியில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இச்சம்பவத்தில் ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த அவரது நண்பர்  முகமது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.

Comments