மாதவிலக்கை சீர் செய்யும் மகத்தான பூ!!

-MMH 

முறையற்ற மாதவிலக்கை சீர்செய்ய கூடியதும், காய்ச்சல் மற்றும் உடல் வலியை போக்கவல்லதும், வயிறு உப்புசத்தை சரிசெய்ய கூடியதுமான அன்னாசி பூவின் நன்மை குறித்து பார்க்கலாம். அன்னாசி பூ மணம் தரக்கூடியது. உணவாவது மட்டுமின்றி உன்னதமான மருந்தாக விளங்குகிறது. மாதவிலக்கு பிரச்னையை சரிசெய்கிறது.

மாதவிலக்கை தூண்டி முறைப்படுத்துகிறது. தாய்ப்பாலை பெருக்க கூடிய அற்புத சக்தி உடையது. அதிக சத்துக்கள் உள்ள இது, புற்றுநோய்களை உண்டாக்கும் நச்சுகளை வெளியேற்றும். செரிமானத்தை தூண்டும். சளி, இருமல் காய்ச்சலை போக்கும் நல் மருந்தாகிறது. அன்னாசி பூவை பயன்படுத்தி மாதவிலக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

-தேவையான பொருட்கள் :

>அன்னாசி பூ

>பெருங்காயம்

>பனைவெல்லம்

-செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதனுடன், ஒரு ஸ்பூன் பனை வெல்லம் சேர்க்கவும். இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்த அன்னாசி பூ பொடி அரை ஸ்பூன் அளவுக்கு போடவும். கால் ஸ்பூன் பெருங்காயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதை தினமும் காலை வேளையில் எடுத்துவர தடைபட்ட மாதவிலக்கு பிரச்னை சரியாகும். மாதவிலக்கை சீர் செய்கிறது. இளம் தாய்மார்களுக்கு பால் பெருக்கியாக விளங்கிறது.

-ஸ்டார் வெங்கட்.          

Comments