சிங்கம்புணரியில் அனைத்து செய்திகளின் எதிரொலியாக! பேரூராட்சி,வாரசந்தைமாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.!
சிங்கம்புணரியில் பேரூராட்சியின் பணிகளையும் அனைத்து செய்திகளின் எதிரொலியாக வாரசந்தையும் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தாலுகா சிங்கம்புணரியில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பேரூராட்சியின் பணிகளை ஆய்வு செய்தார்.
சிங்கம்புணரியில் புதிதாக அமையவிருக்கும் 3 கோடி ரூபாய் மதிப்பிலான 154 கடைகள் அமையவிருக்கம் புதிய வாரச்சந்தை வணிக வளாக பணிகளை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து சிங்கம்புணரியில் உள்ள சிறுவர் பூங்கா பணியின் செயல்பாடுகளை நேரில் ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியர், பூங்கா சிறப்பாக செயல்படுவதை கண்டு அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் கூறினார்.
அதை தொடர்ந்து மீட்பு பூங்காவில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சேகரிக்கப்படும் குப்பைகள் கையாளப்படும் விதம், இயற்கை உரம் தயாரிப்பது, மண்புழு உரம் தயாரிப்பது மற்றும் மூலிகை தோட்டம், வாழைத்தோட்டம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பேரூராட்சி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பணிகளை சிறப்புறச் செய்த பேரூராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் வாரசந்தை நடைபெறும் தற்போதய இடத்தை மாற்றித்தர வேண்டி திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து பத்திரிக்கை செய்திகளின் எதிரொலியாக சிங்கம்புணரிக்கு வருகை தந்த புதிய வாரச்சந்தை கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருப்பதை முன்னிட்டு சந்தை நடைபெற்ற இடத்தையும் பார்வையிட்டு மாற்று இடமாக சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வளாகத்தை ஆய்வு செய்தார்.
-அப்துல்சலாம் திருப்பத்தூர்.
Comments