பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நவம்பர் மாதம் துவங்கிய பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணியானது நிறைவடைந்து உள்ளது. அதன் படி ஆனைமலை தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 215 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிக்கபட்டு உள்ளனர். அவர்களை அனைவருக்கும் இலவச கல்வி என்ற சட்டத்தின் கீழ் மீண்டும் பள்ளிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி கிழக்கு.
Comments