பம்பர் ஸ்பெஷல்! மக்களே, கார் போனால் வாங்கலாம்! உயிர் போனால்....?

 

-MMH

சமீபத்தில் "அனைத்துக்  கார்களிலும் பம்பரைக் கழற்றவும்.  இல்லையென்றால் 5000  ரூபாய் அபராதம்!" என்ற  அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது வாகனங்களில் front bumper இருந்தால் போக்குவரத்து  காவல்துறையினர் அபராதம் விதித்து வருகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் 

"பம்பர் போடுவதால் இவர்களுக்கு என்ன பிரச்சனை, அரசியல்வாதிகள்  அதிகாரிகள் கார்களில் எல்லாம் பம்பர்  உள்ளதே என்று கோபப்படுவதை உணர முடிகிறது.  ஆனால் இது கோபப்பட வேண்டிய செயலா என்பதைச் சற்றே கவனிக்க வேண்டும்.

Front bumperஆல் நம் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்பது நம்மில்  எத்தனை பேருக்குத் தெரியும்? நம்மைப் பொறுத்தவரை விபத்து நேர்கையில் லட்சங்களைப்போட்டு வாங்கிய காருக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாது. ஆனால் அந்த பம்பர்தான்   விலைமதிப்பில்லாத நம் உயிர் பறிபோகக் காரணமாகும் தெரியுமா? 

ஆம்! புதிதாக விற்பனைக்குவரும் கார்களில்  ஓட்டுனரின் முன்பு இருபக்கத்திலும் "Airbag" என்று ஒன்று இருக்கும், காரின் முன்பக்கம் எங்கேயாவது இடிபட்டு விபத்துக்குள்ளாகும் பட்சத்தில், அந்த ஏர்பேக் தன்னிச்சையாகத் ( ஆட்டோமெட்டிக்) திறந்துகொண்டு, நாம் முன்புறக் கண்ணாடியில் மோதி  முகத்தில்  காயம் ஏற்படுத்திக் கொள்வதைத் தவிர்க்கும். 

{ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும் புகைப்படங்கள் } 

இந்த ஏர்பேக் சிஸ்டம் வேலை செய்வதற்காக காரின் முன் பக்கத்தில் இரு பக்கங்களிலும் 'சென்சர்' பொறுத்தப் பட்டுள்ளது. , அந்த சென்சரில் குறிப்பிட்ட அளவிற்கு மேல்  அழுத்தம் ஏற்பட்டால் உடனே காரின் உட்பக்கம் ஓட்டுனரின் இருபக்கத்திலும் 'ஏர்பேக்' தானே திறந்து அவரைப் பாதுகாக்கும்.. ஆனால், காரின் முன் பகுதி அடிபடக் கூடாதென்று நம்மால் பொறுத்தப்படும் front bumperஆல்  என்ன நடக்கும்.?

விபத்து ஏற்படும் போது பம்பர் இருப்பதால் காரின் ரேடியேட்டர்  அடிபடாமல் இருக்கும், அதே வேளையில்  ஏர்பேக்கின் சென்சார் போதிய அழுத்தம் கிடைக்காமல் முன்பக்க ஏர்பேக் வேலை செய்யாமல் இடித்த வேகத்தில் நாம் முன்பக்கம் சாயும் போது கண்ணாடியில் மோதி மூக்கு, மண்டை அடிபட்டு சில நேரங்களில் உயிரிழப்பும் நேரிடும்.

ஆகவே தான் வாகன சட்டப்படி போக்குவரத்துக்  காவல்துறையினர் இவ்விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கின்றனர். எனவே,  உடனடியாக காரில் உள்ள front bumperஐ அகற்றுங்கள். விலையுயர்ந்த வாகனத்தைப் பாதுகாப்பதைவிட, விலைமதிப்பற்ற, போனால் திரும்பி வராத உயிரைக் காப்பது  முக்கியம் என்பதை உணருங்கள். 

அரபு நாடுகளில்  போலிஸ் வாகனத்தைத்  தவிர வேறு எந்த வாகனத்திலும், பம்பரைக்  காண இயலாது. மீறினால் அது போக்குவரத்து குற்றமாகும் என்பதை கவனிக்க வேண்டும்.

விபத்து "விபத்தாக" நேரலாம், நம் "வினையால்"  நேரக்கூடாது....அப்படித்தானே!

"விதிமுறைகள் நமக்கானவை!" என்ற உணர்வோடு,

-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை.

Comments