பெண்கள் அணியும் கொலுசு, மெட்டிக்கு பின்னால் உள்ள ரகசியம்!!

  

  -MMH 

பெண் பிள்ளைகளுக்கு நமது வீடுகளில் கால்களில் வெள்ளி கொலுசு மற்றும் திருமண நேரங்களில் கணவனால் காலின் இரண்டாவது விரலில் மெட்டி அணிவிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. காலில் கொலுசு அணிவதால் கருப்பை, சூலகம் மார்பகத்தின் செயல்பாடுகளை தூண்டும் நரம்பு சிறப்பிக்க செயல்படுகிறது.

உலோகங்கள் இயல்பாகவே தனக்குள் வரும் மற்றொரு ஆற்றலை கடத்தி சீராக பரப்பும். அந்த வகையில், வெள்ளி உலோகத்தால் இனப்பெருக்க உறுப்புக்கள் விருத்தி அடைகிறது. சிறு வயதில் இருந்து குழந்தைகள் கொலுசு அணிந்து, சரியான உணவு பழக்கவழக்கத்தை மேற்கொண்டு இருந்தால், சரியான வயதில் பருவத்தையும் அடைகிறார்கள். 

பருவமடைந்த பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் மற்றும் மார்பக பிரச்சனைகளை சரி செய்ய பிற சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், கால்களில் வெள்ளி அணிந்தால் மேற்கூறிய பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். கருப்பை இறக்கம் போன்ற பிரச்சனையை சரி செய்ய தடித்த கொலுசுகள் உதவி செய்யும்.

பெண்கள் திருமண நாளில் மெட்டி அணியும் இடம் நரம்பு முடியும் இடங்கள் ஆகும். இவை பாலுணர்வை அதிகம் தூண்ட வழிவகை செய்கிறது. திருமணம் முடிந்தும் பல பெண்களுக்கு ஏற்படும் தாம்பத்திய வலி தொடர்பான பிரச்சனைகள் பாலுணர்வு சரியாக ஏற்படாததும் காரணமாக இருக்கிறது. வெள்ளியினால் அணியும் மெட்டி பாலுணர்வை அதிகரிக்கிறது. 

ஆண்களை பொறுத்த வரையில் பாலுணர்வை தூண்டுவதில் பிரச்சனை இருக்காது. ஆனால், பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் தயாராகும் பட்சத்தில் மட்டுமே பாலுணர்வு தூண்டப்படும். 

-ஸ்டார் வெங்கட் .

Comments