புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் சோனுசூட்!!

     -MMH

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்தமான மாநிலங்களை நோக்கி சென்றனர்.

அவ்வாறு நடந்து செல்லும் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியவர் நடிகர் சோனுசூட் என்பது தெரிந்ததே. அவர் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்வதை பார்த்த போது முன்னணி ஹீரோக்கள் கூட இத்தனை கோடி செலவு செய்யவில்லை, சோனு சூட் எப்படி இவ்வளவு கோடி செலவு செய்கிறார் என்ற ஆச்சரியம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி அவர் தனது சொத்துக்களை அடமானம் வைத்து ரூபாய் 10 கோடி பெற்று அந்த பணத்தில்தான் அவர் பொது மக்களுக்கு உதவி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் காரணமாக சோனுசுட் பாராட்டை பெற்றாலும் ஒருசில நெட்டிசன்கள் அவரை திட்டி வருகின்றனர். 

தங்களிடம் அதிகப்படியான பணம் இருந்தால் மட்டுமே மற்றவர்களுக்கும் பொதுமக்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்றும் நாளை ஏதாவது பிரச்சனை வந்தால் உதவி பெற்றவர்கள் அவரை காப்பாற்ற மாட்டார்கள் என்றும் தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர் இருப்பினும் சோனு சூட் அவர்களின் இந்த உதவிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-சுரேந்தர்.

Comments