வேல் யாத்திரை ! பாஜகவினர் மீது வழக்கு!!

    -MMH

    மேலூரில் பாஜகவின் எல்.முருகன், ஹெச்.ராஜா, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு!

தமிழக அரசு தடை விதித்திருந்த போதிலும், பாஜகவின் வேல் யாத்திரை தொடர்ந்து பயணித்துக்கொண்டுள்ளது. மேலூரிலும் வேல் யாத்திரை அனுமதியின்றியே கடந்தது. பேருந்து நிலையம் அருகில் நடந்த கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன், ஹெச்.ராஜா, நடிகை காயத்ரி ரகுராம், பேராசிரியர் ஸ்ரீநிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு அனுமதி இல்லாத காரணத்தால் எல்.முருகன், எச்.ராஜா, காயத்ரி ரகுராம், பேராசிரியர் மதுரை ஸ்ரீநிவாசன், மதுரை மாவட்டச் செயலாளர் கண்ணன், சுசீந்திரன் மற்றும் எவரெஸ்ட் தென்னரசு ஆகியோர் உள்ளிட்ட 200 பேர் மீது கொரோனா காலத்தில் அரசு அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் மேலூர் காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.

- பாரூக், சிவகங்கை.

Comments