கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் மறைவு!! - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!!

     -MMH

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்  திரு அப்துல் ஜப்பார் ( 26.06. 1939 -  22.12.2020) தமிழக எழுத்தாளரும், ஊடகத்துறையில் ஒரு மூத்த தமிழ் ஒலிபரப்பாளரும், விளையாட்டு வர்ணனையாளரும், ஈ.எஸ்.பி.என் செய்தி ஆசிரியருமாவார்.

தனது அழகிய தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த அப்துல் ஜப்பார் கிரிக்கெட் வர்ணனையாளர் மட்டுமல்ல. ஒரு எழுத்தாளரும் ஆவார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81 . அவருடைய மறைவுக்கு தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொலைக்காட்சிகள் இல்லாத காலத்தில் வானொலியிலும் தொலைக்காட்சிகள் வந்த பிறகு தொலைக்காட்சிகளிலும் கிரிக்கெட் போட்டிகளை தனது அழகான சுவாரஸியமான தமிழ் வர்ணனை மூலம் போட்டி நடப்பதை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியவர் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார். இவருடைய வர்ணனைக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்.

அப்துல் ஜப்பார், தமிழ்நாடு – கேரளா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ரஞ்சி போட்டியில் முதல்முறையாக வர்ணனை செய்து தனது வர்ணனையாளர் பயணத்தை தொடங்கினார். பின்னர், 1980-களில் பல சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு வானொலியில் வர்ணனை செய்தார். அதனைத் தொட்ர்ந்து, தொலைக்காட்சிகள் வந்த பிறகும், ஈஎஸ்பின், நியோ ஸ்போர்ட்ஸ் போன்ற விளையாட்டுத் தொலைக்காட்சிகளிலும் அவருடைய அழகிய தமிழில் வர்ணனை செய்துள்ளார்.

அப்துல் ஜப்பார் கிரிக்கெட் வர்ணனையாளர் மட்டுமல்ல. ஒரு எழுத்தாளரும் ஆவார்.

அவர் எழுதி வெளியிட்டுள்ள நூல்கள்:


#காற்று வெளியினிலே


#இறைத்தூதர் முஹம்மது - மொழிபெயர்ப்பு நூல் (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு)


#அழைத்தார் பிரபாகரன்


பெற்ற விருதுகளும் கௌரவங்களும்:


1.லண்டன் தமிழ் வானொலி விருது


2.இலங்கை அரசின் விருது


3.துபாயில் 10 அமைப்புகள் சேர்ந்து அளித்த விருது


4.தமிழ்மாமணி விருது


உசாத்துணை

இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011 .

திரு அப்துல் ஜப்பார் அவர்களின் மறைவுக்கு  மக்கள் நீதி மையம் தலைவர் திரு கமலஹாசன் அவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார்.

அவருடைய மறைவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அழ்ந்த சோகத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V.ராஜசேகரன்,தஞ்சாவூர்.

Comments