தமிழகத்தில் மீண்டும் லாக் டவுனா?! - முதல்வர் முக்கிய முடிவு!

-MMH 

தமிழக மருத்துவக் குழுவுடன் வரும் 28-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது அவர் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். பிரிட்டனில் மரபியல் மாற்றம் அடைந்த வீரியமுள்ள கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. அதனால் அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், உலக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இங்கிலாந்துடனான விமான சேவையை உலக நாடுகள் நிறுத்தியுள்ளன. புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பூடான் அரசு 7 நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக டென்னை வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் உறுதி செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் பிரிட்டனில் இருந்து வந்த 553 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாவும் அவர்களில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.அவர் கிண்டி கிங் இன்ஸ்ட்டிடியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வரும் 28 -ம் தேதி மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். மேலும், நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பொங்கல் பண்டிகை ஆகிய கொண்டாடங்கள் விரைவில் வரவுள்ளன. இந்நிலையில், வரும் 28-ம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

-ஸ்டார் வெங்கட்.

Comments