கோவை அருகே யானை மிதித்து முதியவர் பலி!
இன்று காலை யானை மிதித்து முதியவர் சாவு கோவை டிசம்பர் 28 கோவை மருதமலை அருகே டீ சாப்பிட சென்ற முதியவரை யானை தாக்கி தூக்கி வீசியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்த விவரம் வருமாறு, மருதமலை செல்லும் சாலையில், சட்டக் கல்லூரிக்கு முன்பு உள்ள கட்டிடத்தில் வயதான முதியவர் காவலாளியாக இருந்தார். இன்று அதிகாலை 6 மணிக்கு மருதமலைக்கு சென்று டீ சாப்பிட்டு வருவதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப் பொழுது ஒரு ஆண் யானை அந்தப் பக்கம் வந்தது . அவரைப் பார்த்த யானை தூக்கி வீசி மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணையில் செல்வபுரத்தில் சேர்ந்த முகமது நியாஸ் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது யானை மடுவு பகுதிக்கு அருகில் 11 யானைகளை கண்காணித்து வந்த வனப்பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
-சீனி போத்தனூர்.
Comments