வராக நதியில் சிமென்ட் கழிவுகள் கலப்பு!!

     -MMH

வராக நதியில் கட்டடக் கழிவுகளை கொட்டியுள்ளதால் மீண்டும் மாசடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் வேதனை தெரிவித்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள அகமலைப்பகுதியில் உருவாகி குள்ளப்புரம் என்ற இடத்தில் வைகையாற்றில் வராக நதி கலக்கிறது. இந்த நதியில் வீட்டு கழிவுநீா், மீன், கோழிக் கழிவுகள் கொட்டப்படுவதால் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக வராகநதி மாசடைந்து வந்தது. தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.ரவீந்திரநாத் தனது சொந்த செலவில் இந்நதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளாா்.

இந்த நிலையில் வராக நதியின் ஆடுபாலம் அருகேயுள்ள சுகாதார வளாகம் இடிக்கும் பணி நடைபெற்றது. அப்போது தண்ணீா் தொட்டி உள்ளிட்ட கட்டட கழிவுகள் ஆற்றில் விழுந்துள்ளன. இக்கழிவுகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால் நகாரட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் வராக நதியை பாதுகாப்பதில் பெரியகுளம் நகராட்சி நிா்வாகம் ஆா்வம் காட்டுவதில்லை எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.

-நாளைய வரலாறு செய்திக்காக

-ஆசிக்,தேனி.

Comments